களவாடப்படும் தடுப்பு வேலிகள்...அதிகாரிகளுக்கு தொடர்பா? குற்றம் சாட்டும் பொதுமக்கள்!

களவாடப்படும் தடுப்பு வேலிகள்...அதிகாரிகளுக்கு தொடர்பா? குற்றம் சாட்டும் பொதுமக்கள்!

Published on

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர தடுப்பு வேலிகளை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

காஞ்சிபுரம் உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட 73 ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி சாலையின் இருபுறமும் மெட்டல் தகடுகளால் ஆன பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஆபத்தான வளைவுகள், ஏரிக்கரை ஓரங்கள், பள்ளமான பகுதிகள் என ஆபத்தான பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. 

ஆனால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இவற்றை முறையாக பராமரிப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் இந்த தடுப்பு வேலிகள் சேதமடைந்து, அதுவே விபத்துகளை ஏற்படுத்தும் வண்ணம் காணப்படுகிறது.

மேலும், பல்வேறு இடங்களில் அவ்வப்போது இந்த தடுப்பு வேலிகள் களவாடப்பட்டு வருவதாகவும், ஆனால், துறை சார்ந்த அதிகாரிகள் இதனை கண்டும் காணாதது போல் இருப்பதாகவும், இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருக்குமோ என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

எனவே, இந்த தடுப்பு வேலிகளை முறையாக பராமரித்து களவு போன தடுப்பு வேலிகளின் பாகங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com