ரொமப் ஜாக்கிரதை.. விதிகளை மீறினால்!!.. போக்குவரத்து காவல்துறை கடும் எச்சரிக்கை!!

விதிகளை மீறுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை கடும் எச்சரிக்கை  விடுத்துள்ளது.
ரொமப் ஜாக்கிரதை.. விதிகளை மீறினால்!!.. போக்குவரத்து காவல்துறை கடும் எச்சரிக்கை!!
Published on
Updated on
1 min read

சென்னை வளசரவாக்கத்தில் பள்ளி வேன் மோதி சிறுவன் தீக்சித் பலியான சம்பவம் பெரும்ர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பள்ளிக்குழந்தைகளை அளவுக்கு மீறி ஏற்றிச்செல்ல வேண்டாம் என்று ஆட்டோ, வேன், கார் ஓட்டுநர்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் வாகனம் ஓட்ட சிறார்களை அனுமதிக்க கூடாது என்றும், இன்று முதல் இந்த விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விதிகளை மீறுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னையில் தேர்ந்தெடுத்த 335 பள்ளிகளில் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com