மோடி படம் இல்லாததால் தர்ணா போராட்டம்... கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு...

கோவை மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிரதமர் மோடி புகைப்படம் வைக்க வேண்டும் என்று பாஜக கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியர் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.
மோடி படம் இல்லாததால் தர்ணா போராட்டம்... கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு...
Published on
Updated on
1 min read

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி காரமடை சங்கீதா மற்றும் கோபால்சாமி சூலூர் கவுன்சிலர் ஆகிய இருவரும் பாரத பிரதமர் மோடியின் புகைப்படத்தை கூட்டரங்கு அந்த அறைக்குள் வைக்க வேண்டும் என கூறி வெளி நடப்பு செய்தனர்.

இது குறித்து பலமுறை மாவட்ட ஊராட்சித் தலைவர் சாந்தி அசோகனிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் மோடியின் புகைப்படம் வைக்காததால் பாரதிய ஜனதா கட்சி கவுன்சிலர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடியின் புகைப்படத்தை ஊராட்சி மன்ற கூட்டரங்கத்தில் வைக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர்.  

இது குறித்து பேசிய சூலூர் கவுன்சிலர் கோபால்சாமி இந்த கோரிக்கை கடந்த ஆட்சியில் இருந்தே வைக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் இது வரை பிரதமர் புகைப்படம் வைக்கப்படவில்லை என தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் என்று கூறினால் எடப்பாடியார் படம் தான் வைத்திருக்க வேண்டும்.

ஆனால் அதற்கும் முன்னாள் இருந்த கலைஞர் புகைப்படம் எல்லாம் வைக்கப்பட்டிருக்கும் போது பிரதமர் புகைப்படம் வைக்காதது ஏன் என கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com