பாஜக போட்டியிடும் 10 நாடாளுமன்றத் தொகுதிகள்!

பாஜக போட்டியிடும் 10 நாடாளுமன்றத் தொகுதிகள்!
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான நரசிம்மன் ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ஜோலார்பேட்டை - கிருஷ்ணகிரி இரயில் திட்டம்

அப்போது பேசிய அவர் ஜோலார்பேட்டை - கிருஷ்ணகிரி இரயில் திட்டத்திற்கு இறுதி ஆய்வறிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2.5 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள இரயில்வே துறை அதிகாரிகள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

 சர்வே பணிகளுக்காக இரயில்வே துறை வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி ஒப்பந்தம் கோர உள்ளது. 60 நாட்களில் இந்த சர்வே பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக ட்ரோன் சர்வே மற்றும் ஊழியர்கள் வாயிலாகவும் சர்வே நடத்தப்பட உள்ளது. இந்த இரயில்வே திட்டப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இந்த காரியங்கள் முடிந்து விடும். முடிந்தால் இரயில் விடுவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.

பாஜக போட்டியிடும் 10 தொகுதிகள்

பெங்களூரிலிருந்து ஓசூர் வரை கொண்டுவரப்படும் மெட்ரோ திட்ட பணிகளுக்கு கர்நாடகா அரசு பணம் கொடுக்க தயாராக உள்ளது. தமிழ்நாடு அரசும் இதில் சேர்ந்தால்தான் இந்த திட்டம் நிறைவேறும், இந்த திட்டத்தில் இணைந்து செயல்பட தமிழ்நாடு அரசை கேட்பதற்காக விரைவில் பாஜக சார்பில் முதல்வரை சந்திக்க உள்ளோம் என்றார். 

பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வருகிறது. எதிர்வரும் 2024 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என நாங்கள் காத்திருக்கிறோம். இதில் பாஜக போட்டியிட 10 இடங்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அதில் கிருஷ்ணகிரி மாவட்டமும் ஒன்று என்றார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com