திடீரென டெல்லி சென்றார் இபிஎஸ்...!

Published on
Updated on
1 min read

பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் களம் பரபரப்பாகி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' என்ற கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன. அடிக்கடி ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் வியூகங்களை உடைத்து 'ஹாட்ரிக்' வெற்றி பெற பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. 

இதற்கிடையில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலமாக டெல்லி சென்றார். அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்யும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் அமைந்துள்ளது.

இந்த கூட்டத்திற்கு பிறகு ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோரை எடப்பாடி பழனிசாமி தனித்தனியே சந்தித்து, பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com