கோபத்தில் இருக்கும் மக்களை திசை திருப்பவே திமுக முயற்சி.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது தொடர்பாக, திமுக அரசு திரித்து முன்மொழியும் கட்டுக்கதைகளை நிறுத்த வேண்டும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் தொகுப்பில் காணப்பட்ட குறைகளால் கோபத்தில் இருக்கும் மக்களை திசை திருப்பவே, குடியரசு தின ஊர்தி விவகாரத்தை தமிழக அரசு பெரிதுபடுத்துவதாக விமர்சித்துள்ளார்.

தமிழக ஊர்தி தகுதி அடிப்படையில் தேர்வு பெறாதது தவறாக சித்தரிக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், மகாகவி பாரதியார், வேலுநாச்சியார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்டோர் திமுகவின் கொள்ளைகளுக்கு எதிரானவர்கள் என்றும், பள்ளி பாடப்புத்தகங்களில் வடிகட்டி வரலாற்று குறிப்புகள் எழுதுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினமே தவிர, சுதந்திர தினம் அல்ல எனவும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com