பேருந்து - லாரி மோதி விபத்து; 20 பேர் காயம்!

அரியலூர் மாவட்டம், சுந்தரேசபுரம் பகுதியில் அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.

அரியலூரிலிருந்து கும்பகோணம் நோக்கி அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது, அப்போது சுந்தரேசபுரம் பகுதி வளைவில் திரும்பும்போது, எதிரே வேகமாக வந்த லாரி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அரசுப்பேருந்து சாலை ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதி நின்றது. இதில் காயமடைந்த 20 பயணிகள் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com