லாரி மீது பேருந்து மோதி விபத்து - 20 பேர் காயம்

லாரி மீது பேருந்து மோதி விபத்து - 20 பேர் காயம்

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.

சென்னையிலிருந்து தஞ்சாவூர் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வல்லாபுரம் பிரிவு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியின் மீது மோதிய விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த பேருந்து ஓட்டுனர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com