பின்னர் அந்த இரண்டு காரையும் அதனுள் இருந்த ஏழு பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மாரிராஜ்பாபு (32), புகாரி ராஜ்பாபு (26), பட்டிபிரபாகர் (28), குடா கிஷோர் குமார் (28), அனுகுர்செவுரிமேஸ் (32), அனுகுரிகொண்டபாபு (26), திப்புர ரமேஷ்பாபு (26) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் 7 ஏழு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.