காவல் நிலையத்தில் தந்தை-மகன் படுகொலை...விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகள்!

காவல் நிலையத்தில் தந்தை-மகன் படுகொலை...விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகள்!
Published on
Updated on
1 min read

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சீல் வைக்கப்பட்ட துணை காவல் ஆய்வாளர் ரகு கணேஷின் அறையிலிருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஊரடங்கு விதிகளை மீறியதாக கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரின் மகன் பென்னிக்ஸ். இவர் சாத்தான்குளத்தில் அலைபேசிகளை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாக தக்கியதில்முதல் நாள் இரவு பென்னிக்ஸூம் இரண்டாம் நாள் காலை அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்கள்

இந்த விவகாரம் பூதாகரமாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிபிஐ அதிகாரிகள் அந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் 10 காவலர்களை கைது செய்து மதுரை நடுவண் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

சிபிஐ அதிகாரிகள் சோதனை

இந்த நிலையில் இன்று சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு 3 சொகுசு வாகனங்கள் மற்றும் ஒரு வஜிரா வாகனத்தில் வந்த சிபிஐ அதிகாரிகள், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குள் சென்று சீல் வைக்கப்பட்ட துணை ஆய்வாளர் ரகுகணேஷின் அறையில் இருந்த சீலை அகற்றி அதில் இருந்த வழக்கு சம்பந்தமான முக்கியமான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை கொடூரமாக தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட மர மேசையை பறிமுதல் செய்து சிபிஐ அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்ஆகியோர் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கில் வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் வருகை புரிந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளதால் தற்போது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com