ஜெய்பீம் நல்ல திரைப்படம்-மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே..!

மாநிலத்தில் பற்றி எரியும் தீ..! மத்தியில் ஆதரவா?

ஜெய்பீம் நல்ல திரைப்படம்-மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே..!

ஜெய்பீம் படத்திற்கு ஆதரவளிப்பதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். வேலூர் மாங்காய் மண்டி அருகே நடைபெற்ற மாநாட்டில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, அம்பேத்கர் படத்தை திறந்து வைத்தார்.

பின்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழில் வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் நல்ல திரைப்படம்,  அந்த குழுவினருக்கு தாங்கள் ஆதரவாக இருப்போம் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் இந்த திரைப்படத்தை எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் வரவேற்போம் என்று தெரிவித்தார். ஏற்கனவே ஜெய்பீம் பட விவகாரம் தமிழ்நாட்டில் கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் வேளையில், மத்திய அமைச்சரின் இத்தகைய கருத்து சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.