சட்டப்பேரவை நூற்றாண்டு விழா: ஆளுநரை நேரில் சந்தித்து அழைத்தார் சபாநாயகர் அப்பாவு!

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
சட்டப்பேரவை நூற்றாண்டு விழா: ஆளுநரை நேரில் சந்தித்து அழைத்தார் சபாநாயகர் அப்பாவு!
Published on
Updated on
1 min read

சபாநாயகர் அப்பாவு மற்றும் துணை சபாநாயகர் பிச்சாண்டி, திமுகவின் கொறடா கோ.வி செழியன் ஆகியோர் ஆளுநரை சந்தித்து  உள்ள ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் முழு உருவ திருவுருவப்படம் திறப்பு விழாவிற்கு ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தனர்.

சென்னை மாகணமாக இருந்தபோது, அப்போது  முதன்முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட சட்டபேரவை 1921ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி தொடங்கப்பட்டது. அதனை சிறப்பிக்கும் வகையில் சட்டபேரவை நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்தவகையில் வரும் ஆகஸ்ட் 2 தேதி சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவ படம் திறக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சென்னை கிண்டியில் இருக்கக்கூடிய கவர்னர் மாளிகைக்கு தமிழக சட்டபேரவை  தலைவர் அப்பாவு விழாவுக்கான சிறப்பிதழை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகிதிடம் வழங்கினார். ஏற்கனவே இந்த விழாவிற்கு தலைமை ஏற்க வருகை தருமாறு கடந்த 19ம் தேதி டெல்லியில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அழைப்பு விடுத்து குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com