செங்கல்பட்டில் நில அதிர்வு; ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு!

செங்கல்பட்டு மற்றும் வாணியம்பாடியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பெரும் பாதிப்புக்குள்ளாகி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்நிலையில் செங்கல்பட்டு மற்றும் வாணியம்பாடியில் இன்று காலை 7.35 முதல் 7.42 2 முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. காலையில் ஏற்பட்ட இந்த நில அதிர்வால் மக்கள் அச்சமுற்று வீடுகளில் இருந்து வெளியே வந்தனர். நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வாளர் உறுதி செய்துள்ளனர். 

இதேபோல் கர்நாடகா மாநிலம் விஜயபுராவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com