'சென்னை விழா -2023'...தொடங்கி வைக்கவுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

'சென்னை விழா -2023'...தொடங்கி வைக்கவுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
Published on
Updated on
1 min read

சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ள சா்வதேச கைத்தறி, கைவினை பொருட்கள் மற்றும் உணவு திருவிழாவை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறாா்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், 'சென்னை விழா -2023' எனும் தலைப்பில், சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் உணவுத் திருவிழா சென்னை தீவுத்திடலில் இன்று துவங்கி வரும் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

திருவிழாவில் 311 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வித்தியாசமான கைவினைப் பொருட்கள், விதவிதமான உணவுகள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியை பாா்வையிட வருபவா்களுக்கு நுழைவுக் கட்டணமாக 10 ரூபாய் நிா்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 'சென்னை விழா -2023' எனும் தலைப்பில் நடைபெறவுள்ள திருவிழாவை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவங்கி வைக்கவுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com