ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு எதிராக புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு - ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்!!

ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு எதிராக பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு எதிராக புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு - ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்!!

அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கி, கடந்த ஜூன் மாதம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டறிக்கை வெளியிட்டனர்.

அதில் தெரிவித்திருந்த காரணம் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி இருவரையும் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக் கோரி சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தனித்தனியே மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம், ஓபிஎஸ், ஈபிஎஸ் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com