13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
Published on
Updated on
1 min read

13 மாவட்டங்களில் இன்று கனமழை:

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று கனமழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு:

நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 31ஆம் தேதி இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு:

வருகிற 31ஆம் தேதி சேலம், நாமக்கல்,  திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அன்றைய தினம் நீலகிரி, கோவை, ஈரோடு,  தேனி, திண்டுக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்,  வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளுர், செங்கல்பட்டு,  காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் மாவட்டங்களிலும் மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை மழை:

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com