சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை...

சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கடைகள் மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை...

சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளிக்கடைக்கு பல கிளைகள் உள்ளன. இந்த நிலையில், சென்னையின் தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை மற்றும் போரூர் ஆகிய இடங்களில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு மற்றும் கணக்கில் வராத முதலீடு ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், வருமான வரி சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல் மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் செயல்படும்  சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை ஒப்பனைக்காரர் வீதியில் உள்ள அந்நிறுவனத்தின் வணிக வளாகத்தில், காலை 7 மணி முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறை சோதனையின் காரணமாக காலை முதலே அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com