இதுதான் வாட்ஸ்அப் எண் 9444772222... குவியும் ஏராளமான புகார்!! அதிர்ச்சியில் ஆணையர் ஜெயலட்சுமி

இதுதான் வாட்ஸ்அப் எண் 9444772222... குவியும் ஏராளமான புகார்!! அதிர்ச்சியில் ஆணையர் ஜெயலட்சுமி

 பாலியல் தொல்லைகள் குறித்து மாணவிகள் வாட்ஸ் ஆப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு துணை ஆணையர் சமூக வலைதளங்களில் தனது வாட்ஸ் ஆப் எண்ணைபதிவிட்டுள்ள நிலையில் அவரது எண்ணிற்கு ஏராளமான மாணவிகள் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கே.கே நகரில் உள்ள தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் அதே பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்த ராஜகோபாலன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்த ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தாமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் எனவும், புகார் கொடுக்கும் மாணவிகளின் ரகசியங்கள் காக்கப்படும் எனவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி அவருடைய வாட்ஸ்அப் எண்ணை (9444772222)
சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவிகள் பலரும் தொலைபேசி வாயிலாகவும் வாட்ஸ் அப்பிலும் தொடர்புகொண்டு பள்ளியில் நடக்கும் பாலியல் தொந்தரவு குறித்து தகவல்களை ஏராளமாக பகிர்ந்துள்ளனர். மாணவிகள் அளித்துள்ள புகார் தொடர்பாக ஒவ்வொருவரிடமும் தனித் தனியாக ரகசிய விசாரணை மேற்கொண்டு உறுதியாகும் பட்சத்தில் தனித்தனி வழக்காக பதிவு செய்யப்படும் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.