முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடல்நலக் குறைபாடால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அங்கு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், சாதாரண பிரிவில் முதல்வருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | கோவை கார் விபத்து தொடர்பாக முதலமைச்சர் பரிந்துரைத்தது என்ன?
சமீப நாட்களாக, பல இடங்களுக்கு பயணம் செய்வதோடு, ஓடாது உழைத்த நிலையில், தற்போது தனது உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் இருப்பதால், திமுக தொண்டர்களும், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும் கவலையில் உள்ளனர்.
இது குறித்த விரிவான தகவல்கள் இனி தான் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.