கள ஆய்வில் முதலமைச்சர்...... தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்......

கள ஆய்வில் முதலமைச்சர்...... தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்......

'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற புதிய திட்டத்தை பிப்ரவரி ஒன்றாம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

பிப்ரவரி ஒன்று மற்றும் 2-ஆம் தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு முதலமைச்சர் பயணம் மேற்கொள்கிறார்.  இதன் ஒருபகுதியாக, தமிழ்நாட்டில் முதல் கட்டமாக வேலூர் மண்டலத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி 'கள ஆய்வில் முதலமைச்சர்'  என்ற திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.  

இதன் பின்னர், அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுடன் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து அவர் ஆய்வு மேற்கொள்கிறார்.  அப்போது, குடிநீர், சுகாதாரம் மற்றும் அரசின் முக்கிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்கிறார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com