7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் இல்லை- ஸ்டாலின்

7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  
7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் இல்லை- ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், பொறியியல் படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, சேர்க்கை ஆணையை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்குவதற்கான அடையாளமாக, 50 பேருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்.

முன்னதாக மேடையில் பேசிய முதலமைச்சர், திராவிட இயக்கத்தின் நோக்கமே அனைவருக்கும் கல்வி என்பது தான் என்றார். தொடர்ந்து பேசிய அவர், சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அறிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com