திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ரூபாய் 2.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூபாய் 2.27 கோடி மதிப்பிலான 20 படுக்கை வசதியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட பொது தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் 12 படுக்கை வசதியுடன் கூடிய குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூபாய் 3 கோடியே 25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் பொது மருத்துவத்திற்கு அதிநவீன கருவிகளுடன் கூடிய படுக்கை வசதிகளை காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூபாய் 65 கோடி செலவில் 50 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்.