இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீட்தேர்வு முறையால் தமிழகத்தில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக கல்வியாளர்களின் கருத்து தெரிவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் சமூகநீதிக்கு எதிரான நீட் தேர்வு முறை கைவிடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு சட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், நீட் தேர்வால் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆய்வு செய்ய...
ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஆய்வுக்குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஆய்வுக்குழு நீட்டுக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து....
அதற்கான சாத்திய கூறுகள் மற்றும் சட்ட வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.