ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்ட பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். விமான நிலையம் வந்த பிரதமரை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, ஏ.வ.வேலு ஆகியோர் சேர்ந்து வரவேற்றனர்.
இதனையடுத்து சென்னை விமான நிலையத்திலிருந்து அடையாறில் உள்ள ஐ.என்.எஸ் விமான படைத்தளத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடியை முதலமைச்சர் முக ஸ்டாலின் வரவேற்க புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் விமான படைத்தளத்திற்கு வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.