கிராம மக்களின் அடைப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்: கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி...

கிராம மக்களின் அடைப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என மதுரை மாவட்டம் பாப்பாப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கிராம மக்களின் அடைப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்: கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உறுதி...

மகாத்மா காந்தியில் பிறந்த நாளையொட்டி,  மதுரை மாவட்டம், பாப்பாப்பட்டியில்  கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கொரோனோ பாதிப்பு ஏற்பட்டதால் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முதல்வராக பதவியேற்ற பின் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் முதல் கிராம சபை கூட்டம் இதுவாகும். அமைச்சர்கள் பெரியகருப்பன், பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள், கிராம வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பாப்பாபட்டி ஊராட்சியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள குடிநீர், பேருந்து, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர கிராம மக்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், கிராம மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். பாப்பாப்பட்டி கிராமத்துக்கு நீர்த்தேக்கத்தொட்டி, நியாயவிலை கடை, கதிரடிக்கும் களம்  அமைக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

 முன்னதாக மதுரை மாவட்டம், பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில், கே.நாட்டப்பட்டி கிராமத்தில், வயலில் இறங்கி நாற்று நடவு செய்து கொண்டிருந்த விவசாயப் பெண்களிடம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com