முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது - கேரள முதல்வருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது - கேரள முதல்வருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கேரள முதலமைச்சர் கடிதம்

முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அண்மையில் கடிதம் எழுதி இருந்தார்.

24 மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்க ஏற்பாடு

முல்லைப் பெரியாறு அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். மதகுகளை திறப்பது குறித்து கேரள அரசிடம் 24 மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பினராயி விஜயன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை குறித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கடிதத்துக்கு முக.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், முல்லை பெரியாறு அணையில் விதிகளின் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விடப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும்.என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் தெளிவுபடுத்தி உள்ளார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com