முதல்வர் யார் காலிலும் விழவில்லை யாருக்காகவும் பயந்ததில்லை: வாக்குசேகரிப்பில் இபிஎஸ் - சை தாக்கிய கனிமொழி எம்.பி

முதல்வர் யார் காலிலும் விழவில்லை யாருக்காகவும் பயந்ததில்லை:  வாக்குசேகரிப்பில் இபிஎஸ் - சை தாக்கிய கனிமொழி எம்.பி

ஈரோட்டில் வாக்கு சேகரிப்பில் கனிமொழி எம்.பி

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைதேர்தல் வருகிற 27ம்தேதி நடைபெறும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் 

சம்பத்நகர் பகுதியில் திறந்த வேனில் கனிமொழி வாக்கு சேகரித்து பேசுகையில் ...

பெரியாரின் வாரிசுக்கு வாக்கு கேட்பது நமக்கெல்லாம் பெருமை எனவும் இடைதேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது ஒன்று ஆனால் அதிகபடியாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்

எதிரணியில் இரண்டு இலைகள்

எதிரணியில் இரண்டு இலைகள் வெவ்வேறு நிலைகளில் உள்ளனர் இரட்டை இலை தாமரை இலையாக மாறிவிட்டது தாமரை அதானி என்பவரை தாங்கி பிடித்து கொண்டுள்ளது ராகுல்காந்தி 4000கிமீ நடைபயணம் மேற்கொண்டு பாராளுமன்றத்தில் சென்று கேள்விகள் எழுப்பினார்

எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச வேண்டியதில்லை ஆனால் தோல்வி பயத்தில் நடுங்கிக்கொண்டு பேசினார் யாருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் எனக்கு தெரியும்.எடப்பாடி பழனிசாமி மக்களை கொண்டு சென்று அடைத்து வைத்துள்ளதாக பேசுகிறார் மக்கள் என்ன அதிமுகவில் இருக்க கூடியவர்களா அதிமுகவினர் தோல்விக்கான காரணங்களை தேடுகின்றனர்

முதல்வர் யார் காலிலும் விழவில்லை யாருக்காகவும் பயந்ததில்லை

முதல்வரை பார்த்து வேட்டி கட்டிய ஆணாக இருந்தால் பதில் சொல்லு என கேட்கிறார்கள் முதல்வர் யார் காலிலும் விழவில்லை யாருக்காகவும் பயந்த்தில்லை பாஜகவை கூட எதிர்த்து கேள்வி கேட்ட முதல்வர் ஸ்டாலின் மட்டுமே.எடப்பாடி காலில் விழுந்த கதை தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும் அம்மா இருந்திருந்தால் எடப்பாடி குனிந்து கொண்டிருந்திருப்பார் தொடர்ந்து எடப்பாடி யார் யார் காலில் எல்லாம் விழுந்தார்களோ எனவும் 

இன்றைய நிலையில் 50ஆயிரம் இருந்தால் அறுவைசிகிச்சை மூலம் ஆண் பெண்ணாகலாம் பெண் ஆணாகலாம்.கீழ்தரமாக பேசும் இப்படி பட்ட முதலமைச்சராக இருந்த எடப்பாடியிடம் இருந்து. தமிழகத்தை காப்பாற்றினீர்களே அதற்க்காக முதல்வர் அண்ணன் ஸ்டாலினுக்கு நன்றி முதல்வர் எங்கு இறங்கி நடக்க கூறினாலும் நடப்பார் திமுகவினர் தனி ஆளாக சென்று வர தைரியம் உள்ளது

அதிமுகவினருக்கு தைரியமில்லை

ஆனால் அதிமுகவினருக்கு அந்த தைரியம் இல்லை தேர்தல் தோல்வி பயத்திலிருந்து பிதற்றுவதை எடப்பாடி பழனிசாமி  நிறுத்திக்கொள்ளுங்கள்தமிழக மக்கள் இன்னும் துரோகத்தை மறக்க வில்லை ஒரே நாடு ஒரே தேர்தல் என்றாலும் பாஜகவுடன் சேர்ந்து ஜால்ரா அடிக்கிறார்கள் 

அதிமுகவிற்கு பதிலடி 

இந்த இடைதேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் பதிலடி கொடுக்கும் தேர்தலாக இருக்க வேண்டும் கேடு கெட்டு கீழ்தரமாக பேசுவர்களுக்கு பாடம் புகட்டும் தேர்தலாக அமையும்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com