ஐ.பி.எல். சாம்பியன் சென்னை அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து.!!

ஐ.பி.எல். சாம்பியன் சென்னை அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து.!!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னை அணி அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கர்ஜித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

4-வது முறையாக கோப்பையை வென்றதற்காக வீரர்கள், ரசிகர்கள் என உலகம் முழுவதும் உள்ள சென்னை அணியின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மாபெரும் வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் தோனிக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com