முதலமைச்சர் 70 -வது பிறந்தநாள் விழாவின் பிளான்!!!

முதலமைச்சர் 70 -வது பிறந்தநாள் விழாவின் பிளான்!!!
Published on
Updated on
2 min read

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக பொது செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலின் தலைமை எற்க இருக்கிறார்.  

40 ஆயிரம் பேர் அமரும் வசதி 

இந்த கூட்டத்தில்  அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர்,  மல்லிகார்ஜூன கார்க்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் அகிலேஷ் யாதவ்,  ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தேசிய கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு முதலமைச்சரை வாழ்த்தி பேச உள்ளனர். இந்த பொது கூட்டத்தில் 40 ஆயிரம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. 

டி.ஆர்.பாலு வரவேற்புரை

முதல் இரண்டு வரிசைகள் சிறப்பு விருந்தினர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் அமர்வதற்கும்,அதற்கு அடுத்தபடியாக நாடாளுமன்ற, சட்டமனற உறுப்பினர்கள் அமர்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பொதுக்கூட்டம் தொடங்கியதும், திமுக பொருளாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு வரவேற்புரையாற்றுகிறார்.

துரைமுருகன் தலைமை

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள தலைவர்கள் முதலமைச்சரை வாழ்த்தி பேசுகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை

இறுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரையாற்றுகிறார்.பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்  தலைவர்கள் சார்ந்த காங்கிரஸ், காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, சமாஜ்வாதி கட்சி, ராஸ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின்,  பிரம்மாண்ட கொடிக் கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

50 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் 

தலைவர்களை வரவேற்கின்ற இடத்தில், 50க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.பொதுக்கூட்டம் நடைபெறுகின்ற ஒய் எம் சி ஏ மைதானம் முழுவதும், எல் இ டி விளக்குகளால் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கட்டவுட் கள் வைக்கப்பட்டுள்ளன.மேடை முழுவதும் எல்.இ.டி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.தினமலர் மேடையின் முகப்பில் உதயசூரியன் வடிவிலான எல்இடி விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.மேடையின் பின்புறத்தில் எட்டுக்கும் மேற்பட்ட எல்இடி புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com