முதலமைச்சர் பிறந்தநாள்... வாழ்த்துகள் தெரிவித்த திரை பிரபலங்கள்!!

முதலமைச்சர் பிறந்தநாள்... வாழ்த்துகள் தெரிவித்த திரை பிரபலங்கள்!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி, 'திராவிட நாயகன்' என்ற எழுத்துக்களுடன் ராட்சத பலூன்கள் பறக்க விடப்படவுள்ளன. அன்பகம், பெரியார் திடல் உள்ளிட்ட பல இடங்களில் 70 அடி உயரத்தில் பலூனை பறக்கவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இளையராஜா:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  நீண்ட ஆயுளோடும், நிறைய செல்வங்களோடும், வாழ வாழ்த்துவதாக வீடியோ பதிவாக வாழ்த்துகளை கூறியுள்ளார் இளையராஜா.

வாழ்த்து:  https://youtube.com/shorts/DhpXPWSOmmU?feature=share

ரஜினிகாந்த்:

பிறந்தநாளுக்கு முன்னதாகவே தனது வாழ்த்துகளை வீடியோ பதிவின் மூலம் கூறியிருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.  அந்த வீடியோவில்,”வணக்கம்.  எனது இனிய நண்பர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைட்டர் ஸ்டாலின் அவர்கள் நீண்டநாள் நல்ல ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் மக்கள் சேவை செய்ய வேண்டும் என அவருடைய 70வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துகிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.

வாழ்த்து:  https://youtube.com/shorts/AcaQngS97No?feature=share

வைரமுத்து:

கவிஞர் வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில்,”தமிழ்நாட்டு முதலமைச்சரின் 70ஆம் பிறந்தநாளை முன்னிட்டுஅவரை முகாம் அலுவலகத்தில் சந்தித்தேன்.  நீண்டகாலம் வாழவேண்டும்; வாழும்வரை ஆளவேண்டும் என்று வாழ்த்தினேன்.  பொன்னாடை பூட்டி நான் எழுதிய புத்தகம் கொடுத்தேன்.  தலைப்பைப் பார்த்ததும் சில்லென்று சிரித்தார். "சிகரங்களை நோக்கி".” எனப் பதிவிட்டுள்ளார்.

ஆளுநர்:

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி “70வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர்  திரு. மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என அலுவலக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com