மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்களை சிறைபிடிப்பு:
கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி அன்று மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர் தமிழக மீனவர்கள். அவர்களை கடந்த 10 ஆம் தேதியன்று இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
முதலமைச்சர் கடிதம்:
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின்:
அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த 6ஆம் தேதி அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 10-08-2022 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கையின் திரிகோணமலை கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஸ்டாலின் வலியுறுத்தல்:
மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க, மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன், இதற்குத் தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.