இபிஎஸ் சொன்ன கிறிஸ்துமஸ் கதை : பெரியவர், விவசாயி, ஊழியர் யார்? அரசியலாக கதை சொன்னாரா? ?

கிறிஸ்துமஸ் தின விழாவையொட்டி அதிமுக சார்பாக நடைபெறும் கிறிஸ்துமஸ் தின விழாவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி உரையாற்றினார்
இபிஎஸ் சொன்ன கிறிஸ்துமஸ் கதை : பெரியவர், விவசாயி, ஊழியர் யார்? அரசியலாக கதை சொன்னாரா? ?
Published on
Updated on
1 min read

இபிஎஸ் சொன்ன கதை

முன்னோர் காலத்தில் ஒரு ஊரில் ஒரு நல்ல உள்ளம் கொண்ட பெரியவர் வாழ்ந்து வந்தார். அவர் தனக்கு சொந்தமான நிலத்தில் தனது ஊழியர்கள் மூலம் விவசாயம் செய்து வந்தார்.  அதன்மூலம் கிடைத்த விவசாய வருமானத்தை அந்த ஊர் மக்களுக்கு தான் தர்மம் செய்வதையும் உதவிகள் செய்வதையும் தலையாய கடமையாக கொண்டிருந்தார் இதனால் அப்பகுதி மக்களும் அவர் மேல் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.

 சில காலங்கள் சென்றவுடன் அப்பெரியவர் வயது முதிர்வின் காரணமாக நோயுற்றார் மரண்ப்படுக்கையில்  இருக்கும்போது தன் காலத்திற்கு பிறகு தனது பொறுப்பிற்கு வருபவர் தன்னை போலவே தொடர்ந்து இப்பகுதி மக்களுக்கு அன்பு காட்டக் கூடியவராகவும் உதவி செய்பவராகவும் இருக்க வேண்டும் என்று எண்ணினார். தனது விருப்பத்தை தனது ஊழியர்களிடமும் தெரிவித்தார் அப்பெரியவர் மறைவுக்கு பிறகு கடவுளின் அருளால் ஒரு நல்ல மனிதருக்கு அப்பெரியவரின் பொறுப்புகள் சென்றடகின்றன.

 தெரிவு செய்யப்பட்ட அந்த மனிதர் ஒரு விவசாயி அவர் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை உண்மையாகவும் ஈடுப்பாட்டுடனும் அக்கரையுடனும் பொறுப்புடனும் திறம்பட செய்து வந்தார். பெரியவரின் விருப்பமான விவசாய பலன்கள் முழுமையாக அவ்வூர் மக்களுக்கு சென்றடைய உண்மையாக உழைத்தார்.

 இதை கண்ட ஊழியரகளில் பொறாமை குணம் கொண்ட ஒருசிலர் அந்த விவசாயினுடைய வேலைகள் தடைபடும்படியும் மறைந்த பெரியவரின் விருப்பம் நிறைவேறாதபடி சில சதி வேலைகளில் ஈடுப்படுகின்றனர்.
 அதில் ஒன்றாக பயிர் விளையும் பூமியில் களைகள் வளரும்படியான செயல்களில் ஒருசில ஊழியர்கள் ஈடுபடுகின்றன. 

மேலும் படிக்க | 

 ஆனால் அந்த பெரியவரின் பொறுப்பிற்கு வந்த விவசாயியோ அவற்றை கவனமுடன் பொறுமையாக அந்த இடையூறுகளை புறம் தள்ளி களைகளை கண்டறிந்து களைகளை பிடுங்கியும் துரோகம் செய்த அந்த ஒருசிலரையும் அப்புறப்படுத்துகிறார் . விளைச்சலை மேம்படுத்தி விவசாயப்பணிகளிலேயே கவனம் செலுத்துகிறார் நாட்கள் செல்கின்றன பயிர்கள் வளர்ந்து அறிவடை செய்யப்பட்டு மக்களுக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com