காங்கிரஸ் அலுவலகத்தில் கோஷ்டி மோதலால் பரபரப்பு

காங்கிரஸ் அலுவலகத்தில் கோஷ்டி மோதலால் பரபரப்பு

காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நிர்வாகிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

நேஷன்ல் ஹெரால்டு வழக்கு

சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை நேஷன்ல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைத்தனர். இந்தியா முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் இந்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் எதிரே உள்ள தபால் நிலையம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஜவகர் தலைமையில்-100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர். 

திருச்சி காங்கிரஸ் நிர்வாகிகளிடையே மோதல்

இதனை தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்துக்கு நிர்வாகிகள் அனைவரும் நடந்து வந்தனர். பின்னர் பத்திரிக்கையாளர்க்ளை சந்திக்கும் போது யார் முன்னிலை வகிப்பது என்ற பிரச்சினையில் மாவட்ட தலைவர் ஜவகர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சரவணன் மற்றும் நிர்வாகிக்குள் திடீரென கோஷ்டி மோதல் ஏற்பட்டு கைகலக்கப்பானது. வக்கீல் சரவணனை ஒருவர் தாக்க, மற்றவர்கள் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் அலுவலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்காக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அலுவலகம் உள்ளே வந்து எல்லோரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் அங்கு இருந்த கட்சியினர் அனைவரையும் வெளியேற்றினர்.