விசிக, பாஜக நிர்வாகிகள் இடையே மோதல்!!!!!

விசிக, பாஜக நிர்வாகிகள் இடையே மோதல்!!!!!

திண்டிவனம் யோசனைப் பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் பொழுது விசிக பாஜக அவர்களுடைய மோதல் பரபரப்பு.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷனை பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி |ய நிலையில், இதே போன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த விசிகவினர்  50க்கும் மேற்பட்டோர்  சிலையின் அருகே காத்திருந்தனர்.அப்போது பாஜகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக வந்திருந்தனர். அங்கு கூடியிருந்த விசிகவினர், பாஜகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.இதனைத் தொடர்ந்து பாஜகவினர் விசிகவினர் போலிஸ் கண்முன்னே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

பின்னர் அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உரிய நேரம் ஒதுக்கப்படும், அப்போது வந்து மரியாதை செலுத்திக்கொள்ளுங்கள் என சமரசம் செய்து அனுப்பிவைத்தனர்.பின்பு போலீசாரின் நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்கு பின்பு பாஜகவினர்டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
 இந்த மோதல் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அந்தப் பகுதியில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருப்பதற்கு திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுபாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com