கோவையில் பாஜக பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

கோவையில் கடந்த வாரம் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கோவையில் பாஜக பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

இடப்பிரச்சனை தீர்த்து வைப்பதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம் மோசடி செய்ததாகக் கூறி, ந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு மாநில செயலாளர் பிரசன்ன சுவாமிகள் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீது கடந்த ஆகஸ்டு 2ம் தேதி கோவை செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இதனையடுத்து, தன் மீது காவல்துறையினர் போலியான வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறி, பிரசன்ன சுவாமிகள், கடந்த ஆகஸ்டு 3ம் தேதி, வீடியோ ஒன்றை பதிவிட்டு, மனைவி அஸ்வினி, தாய் கிருஷ்ணகுமாரி மற்றும் தனது 11 வயது மகளுடன் சேர்ந்து பூச்சி மருந்து குடித்து குடும்பத்தோடு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அன்றே, தாயார் கிருஷ்ணகுமாரி இறந்த நிலையில், மற்ர மூவருக்கு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், நேற்று இரவு, சிகிச்சை பலனின்றி பிரசன்ன சுவாமிகள் உயிரிழந்தார்.

தன் மீது பொய் வழக்கிடப்பட்டதாகவும், தனது மானம் மரியாதை போய் விட்டதாகவும், மனைவி, தாய், மகள் என அனைவரும் தனித் தனியே, தங்களது இறுதி வீடியோவாக வெளியிட்டதைத் தொடர்ந்து, அவர் இறப்பு, தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் இறந்த தகவல் அறியாத அவரது மனைவி அஸ்வி மற்றும் அவரது மகள் இருவருக்கும், தீவிர சிகிச்சை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com