பண்ருட்டி தொகுதியில் வேளாண்மை கல்லூரி விரைவில்...!!

பண்ருட்டி தொகுதியில் வேளாண்மை கல்லூரி விரைவில்...!!
Published on
Updated on
1 min read

பண்ருட்டி தொகுதியில் வேளாண்மை கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையை, இந்த ஆண்டு கட்டாயம்  நிறைவேற்றப்படும் என வேளாண் அமைச்சர் உறுதி அளித்ததாக சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கூறியுள்ளார்.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்திற்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.  அப்போது பேசிய அவர்,

முதலமைச்சரின் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் உட்பட மொத்தம் 3 ஆயிரத்தி 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகளில் 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு அரசாணைகள் வெளியிடப்பட்டு, இத்திட்டங்கள் மக்களை சென்று அடைந்துள்ளதை இந்த நிதிநிலை அறிக்கை காட்டுகிறது எனவும் அதற்கு நிதி அமைச்சருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் எனக் கூறினார்.

அதேபோல வேளாண் துறையில் கடந்த 2 ஆண்டுகளில்  அறிவிக்கப்பட்ட 133 அறிவிப்புகளில் 123 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனவும் வேளாண் துறையிலும் திட்டங்கள் மக்களை சென்று அடைந்துள்ளது எனவும் கூறிய அவர் மேலும் 10 அறிவிப்புகளுக்கு மட்டும் மத்திய அரசின் அனுமதி வழங்கப்படாமல் இருக்கிறதாகவும்  வேல்முருகன் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பண்ருட்டி தொகுதியில் வேளாண்மை கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையை, இந்த ஆண்டு கட்டாயம்  நிறைவேற்றப்படும் என வேளாண் அமைச்சர் உறுதி அளித்ததாக சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com