" நீலகிரியில் விரைவில் வருகிறது.... டைடெல் பார்க்...! "

100 கோடி ரூபாய் மதிப்பீட்டில்தொழில்நுட்ப பூங்கா.....
" நீலகிரியில் விரைவில் வருகிறது.... டைடெல் பார்க்...! "
Published on
Updated on
1 min read

நீலகிரி வசிக்கும் படித்த இளைஞர்களுக்கு  வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில்தொழில்நுட்ப பூங்காஅமைக்கப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் இரண்டு ஆண்டு திமுக அரசின் சாதனை பொதுக்கூட்டத்தில் பேச்சு ..

தலைமை கழக அறிவின் படி  நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர திமுக சார்பில் நகர செயலாளர் பாபு தலைமையில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை குறித்த பொதுக்கூட்டம் கூடலூர், காந்தி திடலில் நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசுகையில் கூறியதாவது :-

நீலகிரி மக்களின் நீண்ட கால கோரிக்கையான, நீலகிரி வசிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உள்ளூரில் ஏற்படுத்தற நோக்கில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உதகை அருகே உள்ள HPF பகுதியில் புதிதாக தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும் இதில் நீலகிரியில் படித்த ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில்  மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பரமேஷ் குமார்,  தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோ, கே எம் ராஜு உட்பட திமுக மூத்த முன்னோடிகள்  கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com