" இந்தியாவிலேயே,தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்று குறைவாக உள்ளது" ஆணையர் ராதாகிருஷ்ணன்!!

" இந்தியாவிலேயே,தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்று குறைவாக உள்ளது" ஆணையர் ராதாகிருஷ்ணன்!!

இந்தியாவிலேயே தமிழ்நாடு எச்  ஐ வி தொற்று குறைந்த மாநிலமாக உள்ளதாக சென்னை  பெருநகர மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தீவுத்திடலில் எச்ஐவி விழிப்புணர்வு குறித்து கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் மாரத்தான் நடைபெற்றது. சென்னை மேயர் பிரியா மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விழிப்புணர்வு மாரத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அப்பொழுது பேசிய ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை தினத்தையொட்டி கடந்த மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இன்று காலை சைக்கிள் போட்டியும் நடைபெற்றது அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் பரிசுகள் வழங்கப்பட்டது.

தற்போது சென்னை தீவு திடலில் எச்ஐவி விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. இளைஞர்கள் மற்றும் பொது மக்களுக்கு எச்ஐவி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த மாரத்தான்  போட்டி நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், 2012 ஆம் ஆண்டு சென்னை, நாமக்கல் உள்ளிட்ட நகரங்களில் எச்ஐவி மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் நோயாக இருந்தது. அதன் பிறகு ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக இந்தியாவிலேயே தமிழகம் எச்ஐவி குறைந்த மாநிலமாக உள்ளது. ஆனால் கொரோனா டெங்கு போன்ற புதிய நோய் தொற்றுகள் வரும்போது எச்ஐவி குறித்த விழிப்புணர்வை மக்கள் மறந்து விடுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் 300 சுகாதார நிலையங்கள் உள்ளது. நோய் தொற்று குறித்த 53 ஆலோசனை மையங்கள் சென்னையில் உள்ளது. பிறப்புறுப்பு நோய்கள் பற்றி தெரிந்து கொள்ளவும் சிகிச்சை பெறவும் 14 சிறப்பு மையங்கள் உள்ளது. 12 ரத்த வங்கிகளும் சென்னையில் உள்ளது இவற்றின் மூலம் நோய் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். மேலும் எச்ஐவி போன்ற நோய்களுக்கு சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் இறப்பை தற்காலிகமாக தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com