காவல்துறை உதவியுடன் கட்டப்பஞ்சாயத்து... வியாபாரியை மிரட்டும் நபர் மீது வெள்ளையன் புகார்...

சென்னையில் வியாபாரியிடம் காவல் துறையினர் உதவியுடன் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். 
காவல்துறை உதவியுடன் கட்டப்பஞ்சாயத்து... வியாபாரியை மிரட்டும் நபர் மீது வெள்ளையன் புகார்...
போரூர் காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான கடையை சஜீம் என்பவர் வாடகைக்கு எடுத்து அதில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடைக்கான வாடகையை கேட்கச் சென்ற மாரிமுத்துவை காவல் துறையினர் உதவியுடன் சஜீம் மிரட்டி ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் சென்னை காவல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவல் ஆணையர் தலையிட்டு மாரிமுத்துவிடம் மிரட்டிப் பெறப்பட்ட ஒப்பந்தப் பத்திரத்தை பெற்றுத்தர  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com