மக்களின் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழிற்கடன் வசதியாக்கள் முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர், 20 பயனாளிகளுக்கு பல்வேறு துறையின் பிரிவுகளின் கீழ் 8 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து வங்கிகளில் இருந்து மானியத்துடன் கடன் நிதி உதவிகள் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருவதை மக்கள் அறிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.