வண்ண வண்ண ஓவியங்களால் காட்சியளிக்கும் தாம்பரம் ரயில்நிலையம்!

சென்னை தாம்பரம் ரயில் நிலையம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
வண்ண வண்ண ஓவியங்களால் காட்சியளிக்கும் தாம்பரம் ரயில்நிலையம்!

சென்னை தாம்பரம் ரயில் நிலையம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் இரண்டாம் அலையை தொடர்ந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் மூன்றாம் அலை இருக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனினும் மூன்றாம் அலையில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் எந்தவித அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழக அரசு சார்பிலும், தனியார் துறையினரும், தன்னார்வல தொண்டர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தெற்கு ரயில்வே சார்பில் சென்னை தாம்பரம் ரயில் நிலையம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாகவும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com