ஆம்புலன்ஸாக மாறிய சொகுசு கார்கள்... இளைஞர்கள் தாராளம்!!

ஆம்புலன்ஸாக மாறிய சொகுசு கார்கள்... இளைஞர்கள் தாராளம்!!

மதுரையில், இளைஞர்கள் சிலர் தங்களது சொகுசு கார்களை ஆம்புலன்ஸாக வழங்கி, கொரோனா நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருகின்றனர். 

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தீவரமடைந்துள்ளது. வைரஸ் தொற்றினை  கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் திங்கள் கிழமை முதல் வரும் 30ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஆக்சிஜன் குறைபாடு, மருத்துவமனையில் படுக்கை தட்டுப்பாடு, மருந்து பற்றாக்குறையை போக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  

இந்த நிலையில், தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ்களுக்கு கடும் கிராக்கி நிலவி வருகிறது. இதனை போக்கவும், கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையிலும், மதுரையை சேர்ந்த இரு இளைஞர்கள் தங்களது சொகுசு கார்களை நோயாளிகளுக்கான ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளனர். மேலும் அவர்களே டிரைவராக தங்களை ஏற்படுத்திக்கொண்டு, கொரோனா நோயாளிகளை இலவசமாக மருத்துவமனை அழைத்து சென்று வருகின்றனர்.