தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றுக்கு புதிதாக ஆயிரத்து 562 பேர் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அரசு மருத்துவமனைகளில் 13 பேர், தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் என 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை மொத்தமாக 34 ஆயிரத்து 961 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
மேலும், தொற்று பாதிப்பில் இருந்து புதிதாக ஆயிரத்து 684 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 478ஆக குறைந்துள்ளது. சென்னையில் புதிதாக 166 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் தொற்று பாதிப்பு குறைந்து 215-ஆக பதிவாகியுள்ளது.