தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தாக்குதலுக்கு மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த சூழலில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று, புதிதாக ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டோரில் இன்று 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 76 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தோரில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 178 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதுடன், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 716ஆக உள்ளது. இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது, அம்மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com