எச்சரிக்கையாக இருங்கள் தமிழக மக்களே... திடீரென உயருகிறது கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 568 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எச்சரிக்கையாக இருங்கள் தமிழக மக்களே... திடீரென உயருகிறது கொரோனா பாதிப்பு...
Published on: 
Updated on: 
1 min read

தமிழகத்தில் குறைந்து கொண்டு வந்த கொரோனா பாதிப்பு 6  நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்துள்ளது. அந்தவகையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பு ஆயிரத்து 562இல் இருந்து ஆயிரத்து 568 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 742 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 657 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25 லட்சத்து 68 ஆயிரத்து 161 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதே சமயம், நேற்றும் கொரேனா பாதிப்பால், 19 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 980 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 370 ஆக உள்ளது. சென்னையில் புதிதாக 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக கோவையில் 239 பேருக்கும், ஈரோட்டில் 125 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com