தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மொத்த பாதிப்பு 26 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 594 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறியுள்ள சுகாதாரத்துறை, தமிழகத்தில் கொரோனாவால் இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 232 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கோவையில் 215 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.