தமிழகத்தில் ஆறாயிரத்திற்கு கீழ் கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து ஆறாயிரத்திற்கு கீழ் வந்ததால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஆறாயிரத்திற்கு கீழ் கொரோனா பாதிப்பு...
Published on: 
Updated on: 
1 min read

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் புதிதாக 5 ஆயிரத்து 127 பேருக்கு மட்டுமே இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து, 42 ஆயிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 91 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை தொற்று காரணமாக மொத்தம் 32 ஆயிரத்து 290 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 7 ஆயிரத்து 159 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 649 பேருக்கும், ஈரோட்டில் 530 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில்  308 பேருக்கு மட்டுமே தொற்று  பாதித்துள்ளது குறிப்பிடதக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com