கொரோனா தொற்றால் மேலும் 25 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரித்து ஆயிரத்து 700ஐ நெருங்கியுள்ளது.
கொரோனா தொற்றால் மேலும் 25 பேர் உயிரிழப்பு
Published on: 
Updated on: 
1 min read

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரித்து ஆயிரத்து 700ஐ நெருங்கியுள்ளது.


தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மொத்த பாதிப்பு 26 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறியுள்ள சுகாதாரத்துறை, தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 202 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கோவையில் அதிகபட்சமாக 206 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 16 ஆயிரத்து 756 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 25 லட்சத்து 88 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com