மாணவர்களை அச்சுறுத்தும் கொரோனா தொற்று...  பள்ளிக்கு விடுமுறை அளித்தது மாவட்ட நிர்வாகம்...

கோவை மற்றும் புதுகோட்டை மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களை அச்சுறுத்தும் கொரோனா தொற்று...  பள்ளிக்கு விடுமுறை அளித்தது மாவட்ட நிர்வாகம்...
Published on: 
Updated on: 
1 min read

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பல மாதங்களாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தற்போது  9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் அருகே சுல்தான்பேட்டை  அரசு மேல்நிலைப்பள்ளியில் மூன்று மாணவர்களுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்களை பரிசோதனை செய்ததில் மூவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள முள்ளகுறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிடர் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவிக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com