அப்போது மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை.! ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பதில்.! 

அப்போது மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை.!  ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பதில்.! 
Published on
Updated on
1 min read

தேர்தல் அறிவிப்புக்கு பின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எந்த அலட்சியமும் காட்டவில்லை என, முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அதிமுக அரசு அலட்சியம் காட்டியதால் தான்  கொரோனா பரவல் அதிகரித்ததாகவும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பதை போல பிப்ரவரி முதல் மே மாதம் வரை பணிகள் செய்ய எடப்பாடி பழனிசாமி மறந்து விட்டதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வாக்குப்பதிவு முடிந்த பின்னர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்த அனுமதி வேண்டி மத்திய அரசுக்கு ஏப்ரல் 9-ம் தேதி கடிதம் எழுதியதாகவும், ஆனால், அதற்கு மத்திய அரசிடம் இருந்து பதில் வராத நிலையிலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கைகளை முடுக்கி விட்டதாகவும் கூறினார். மேலும்,  முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிடுவது போல் அலட்சியம் காட்டவில்லை எனவும் மறுப்பு  தெரிவித்தார்..

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com